ADVERTISEMENT

ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோகினி தே கணவரை பிரிந்தார்!

Published On:

| By Kumaresan M

ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்து அறிவித்த சில மணி நேரங்களில் அவரின் கிட்டாரிஸ்ட் மோகினி  தேவும் கணவரை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மனைவி சாயிரா பானு ஆகியோர் பிரிந்து செல்வதாக நேற்று இரவு அறிவித்தனர். 29 ஆண்டு கால இல் வாழ்க்கைக்கு பிறகு, இந்த தம்பதி இத்தகைய முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, இந்த  அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிட்டாரிஸ்டாக உள்ள மோகினி தேவும்  தன் கணவரும் கம்போசருமான மார்க் ஹார்ட்சர்ச்சை பிரிவதாக இன்ஸடாகிராமில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள   பதிவில் ‘ நானும் மார்க்கும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இனிமேலும், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கப் போகிறோம். தொடர்ந்து, மாமோஜி, மோகினி தே குழுக்களில் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம் . எங்கள் முடிவை மதிக்கவும்.  நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தந்தை இசைக்குழுவில் பணியாற்றியதால், மோகினிக்கு இயல்பாகவே இசை மீது அதிக ஆர்வம் இருந்தது.  10 வயதில் இருந்து கிட்டார் வாசிக்க தொடங்கினார். தற்போது 29 வயதான மோகினி தே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து உலகம் முழுக்க 40 இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது முதல் இசை ஆல்பத்தையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,  ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்த சில மணி நேரங்களில் மோகினி கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கார்த்திகை மாத  நட்சத்திர பலன்கள்: அனுஷம்!

2011 ஆம் ஆண்டு ஆர்ய சமாஜம் சென்ற டயனா மரியம்… பெயர் மாறிய பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share