’அல்லு அர்ஜுன் – பசில் ஜோசப் காம்போ’ கேட்கவே வித்தியாசமா இருக்கே..!

Published On:

| By uthay Padagalingam

Basil Joseph To Team Up With Allu Arjun

டாம்க்ரூஸ் Basil Joseph To Team Up With Allu Arjun

எண்பதுகளின் இறுதி வரை சென்னையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களின் ஆக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மொழியில் பிரபலமான நடிகரோ, நடிகையோ இன்னொரு மொழிப்படத்தில் அறிமுகமாவதும் புகழ் பெறுவதும் பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. ஆனால், தொண்ணூறுகளுக்குப் பிறகு திரையுலகங்கள் மாநிலவாரியாக நகர்ந்தபிறகு அந்த நிலைமை சுத்தமாக இல்லை. அதனை மீறி விமானத்தில் பறந்து பறந்து சென்று நடித்துப் புகழ் பெற்றவர்கள் ஒரு சிலரே.

ஆனால், ஓடிடி வரவுக்குப் பிறகு அந்த நிலை தலைகீழாகி இருக்கிறது. கூடவே ‘பான் இந்தியா’ படங்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. அதனால், ரசிகர்கள் இந்த நடிகர், நடிகைகளை ஏற்றுக்கொள்வார்களா என்ற கவலை இல்லவே இல்லை. அது மட்டுமல்லாமல், ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத இரண்டு பிரபலங்கள் ஒன்றிணைந்து படம் தந்தால் எப்படியிருக்கும் என்று உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். Basil Joseph To Team Up With Allu Arjun

ADVERTISEMENT

இந்த விஷயம் அப்படிப்பட்டது தானா அல்லது உண்மையிலேயே இது நிகழப் போகிறதா என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது ‘அல்லு அர்ஜுன் – பசில் ஜோசப் காம்போ’ குறித்த தகவலொன்று. Basil Joseph To Team Up With Allu Arjun

அட்லீயின் இயக்கத்தில் தயாராகிற படத்திற்குப் பின்னர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு சரித்திரப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருப்பதாகவும், அல்லு அர்ஜுனுக்குப் பதில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

ஆதலால், பசில் ஜோசப் இயக்குகிற அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெலுங்கு திரையுலகில் உலவுகின்றன. சமீபகாலமாகவே, தான் பங்கேற்கும் பேட்டிகளில் ஒரு பெரிய நடிகரை இயக்கப் போவதாகப் பசில் கூறி வருவதால் விஷயம் உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அல்லு அர்ஜுன் குடும்ப நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் அதனைத் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான முன்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

கோதா, மின்னல் முரளி படங்களைத் தந்தவர் பசில் ஜோசப். ஒரு நாயகனாக, அவர் தேர்வு செய்கிற கதைகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றன. ஆதலால், அவருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி சேரும்போது திரையில் பெரிதாக மாயாஜாலம் நிகழலாம்.

அதனைக் காணத் தானே எல்லா ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share