வீட்டிலேயே முறையாக சருமப் பராமரிப்பை ஆரம்பியுங்கள். சரிவிகிதமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள். போதுமான அளவு தூங்குங்கள். தண்ணீர் குடியுங்கள். சர்க்கரை உணவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். புகைப்பழக்கம், மது போன்றவற்றின் பக்கம் செல்லாதீர்கள். இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக தினசரி செய்யும்போது சரும நலன் மேம்படும்.
சருமப் பராமரிப்புக்கான அடிப்படை விஷயங்களாக நல்ல மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன், ஃபேஸ் வாஷ் போன்றவற்றைத் தொடங்குங்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இந்த நடைமுறையை தொடர்ந்தால்தான் அழகு சிகிச்சையை ஏற்றுக் கொள்வதற்கே உங்கள் சருமம் தயாராகும். அதன் பிறகே அழகு சிகிச்சை பற்றி யோசிக்க வேண்டும்.
இத்துடன் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும் சரும நலன் அடங்கியுள்ளது. உதாரணத்துக்கு, பப்பாளியை முகத்தில் தடவுவதை விட, அதை அப்படியே சாப்பிடும்போது சருமத்துக்குக் கிடைக்கும் பலன் அதிகம். இதைத்தாண்டி சருமம் தொடர்பான ஏதேனும் பிரச்சினை வருகிறது, முகத்தில் பரு வருகிறது, சரும நிறம் கறுப்பாகிறது, மங்கு வருகிறது என்றால் சரியான சருமநல மருத்து வரைத் தேடுங்கள். இதுவே போதும்’’ என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!
இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு
கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!
கலைஞரின் கனவுத் திட்டம்… கடைசி தடையை உடைத்த அமைச்சர் அனிதா- நெல்லை, தூத்துக்குடி மக்கள் நிம்மதி!