முடி திருத்துபவர் செய்த மசாஜ்: இளைஞருக்கு ஏற்பட்ட பக்கவாதம்!

Published On:

| By christopher

Barber's massage caused stroke

கர்நாடக மாநிலத்தில் முடி திருத்தும் கடைக்குச் சென்ற 30 வயது இளைஞருக்கு, வழக்கமாக செய்யும் தலை மசாஜால் பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கே வினையாகிவிட்டது.

கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

முடி திருத்தும் கடையில், முறையான பயிற்சி இல்லாத நபர் அளித்த மசாஜின்போது, திடீரென கழுத்தை திருப்பியதில், அவரது நரம்பு கிழிந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மசாஜ் செய்தபிறகு, அவரது கழுத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார். வீட்டுக்கும் சென்றார். ஆனால், வீட்டுக்குச் சென்று ஒரு சில மணி நேரங்களில், அவரால் பேச முடியவில்லை, அவரது இடதுபக்க உடல் பாகங்கள் அசைவற்று போனது.

இதனால், மருத்துவமனைக்கு விரைந்த ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பக்கவாதம் பாதித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

காரணம், அவரது கழுத்தை மசாஜ் செய்தபோது திடீரென திருப்பியதில், கழுத்து நரம்பு கிழிந்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசியுள்ள நரம்பியல் துறை மருத்துவர் “இவருக்கு இயற்கையான பக்கவாத பாதிப்பைப் போல் அல்லாமல், ஒருவித்தியாசமான பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. கழுத்தை திருப்பியதால், நரம்பு கிழிந்திருக்கிறது. இதனால், நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும் ரத்தம் கசிந்து, சரியான அளவில் ரத்தம் மூளைக்குச் செல்லாமல் செயற்கையான முறையில் ஒரு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது, அவருக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், அவரது நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுத்தால்தான் பூரண குணமடைய முடியும் என்றும் நம்பிக்கை தெரித்துவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, “திடீரென கழுத்தை வேகமாக திருப்புதல் அல்லது கழுத்தசைவுகள், இதுபோன்ற மோசமான நிலையை ஏற்படுத்தலாம். வழக்கமாகவே இதுபோன்ற மசாஜ் அல்லது பயிற்சிகளை யாரும் செய்ய வேண்டாம். இது எந்தவகையிலும் மனிதர்களுக்கு நல்லதல்ல” என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்பு முதல் இந்தியா – வங்கதேசம் 3வது நாள் ஆட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்:  நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?

ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!

80 டன் குண்டு வீசி ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை- இஸ்ரேல் வெறியாட்டம்!

வேலைவாய்ப்பு : NCLT- பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share