நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு!

Published On:

| By Selvam

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி ஆறு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் பிரநிதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை நேற்று (மார்ச் 27) நேரில் சந்தித்து முறையிட்டனர். Bar associations urge sanjiv khanna

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ பற்றியபோது கட்டுகட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் மிக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், அலகாபாத், ஜபால்பூர், லக்னோ, குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களான நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த், அபய் எஸ். ஓகா, விக்ரம் நாத் ஆகியோரை நேற்று சந்தித்தனர்.

ADVERTISEMENT

இந்த் சந்திப்பின் போது நீதிபதி யஷ்வந்த வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அனில் குமார் திவாரி, “நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி கண்ணா உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார். Bar associations urge sanjiv khanna

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share