ஆலமரக் கிளை விழுந்து விபரீதம் :100 நாள் வேலை தொழிலாளிகள் பலி!

Published On:

| By Kavi

banyan tree branch falls two women die

திருவண்ணாமலையில் ஆலமரக் கிளை முறிந்து விழுந்து இரண்டு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. banyan tree branch falls two women die

தமிழகத்தில் மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.  இதன்காரணமாக 100 நாள் வேலைக்கு  செல்லுபவர்கள்  ஆங்காங்கே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். அதை கிராமங்களில் பார்க்க முடிகிறது. 

அப்படிதான் திருவண்ணாமலை மாவட்டம்  கழனிப்பாக்கத்தில் 100 நாள் வேலையை முடித்துவிட்டு சில பெண்கள் அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.  அப்போது பலத்த காற்று வீசியிருக்கிறது. 

இதில் ஒரு பெரிய மரக்கிளை முறிந்து அங்கிருந்த பெண்கள் மீது விழுந்திருக்கிறது. இதனால் மரத்தடியில் அமர்ந்திருந்த அன்னபூரணி, வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மரக்கிளையை அகற்றி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வெயிலுக்காக இளைப்பாறிக்கொண்டிருந்தவர்கள் திடீரென உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. banyan tree branch falls two women die

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share