வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 27ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
வருகிற 25ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) மற்றும் 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என இரண்டு நாட்கள் வார விடுமுறை. இதையடுத்து 27ஆம் தேதி (திங்கட்கிழமை) வேலை நிறுத்தம் என்பதால் அன்று பரிவர்த்தனை நடைபெறாது என்று வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்**
