வங்காளதேசத்தில் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. 6.15 கிலோமீட்டர் நீளத்திற்கு வங்காளதேசத்தில் புகழ்பெற்ற பத்மா ஆற்றின் மீது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இன்று வங்காளதேச அதிபர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார். வங்காளதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
சாலை, ரயில் என்று நான்கு வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் அந்த நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் திறப்பு விழாவில் இன்று அந்த நாட்டு அதிபருடன், நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த பாலத்தைத் திறந்து வைத்து வங்காளதேச அதிபர் ஷேக் ஹசீனா பேசுகையில், “6.15 கிலோமீட்டர் நீளத்திற்கு பத்மாவதி மீது அமைக்கப்பட்ட இந்த பாலம் வெறும் சிமெண்ட் மற்றும் கற்களால் அமைக்கப்பட்டது அல்ல. இந்த பாலம் நமது நாட்டின் பெருமை, திறன் மற்றும் வலிமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நமது நாட்டு கண்ணியத்தின் சின்னம். இதன் மூலம் நமது நாட்டின் சமூக பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், “19 தென்மேற்கு வங்காளதேச மாவட்டங்களை இணைக்கும் இந்த நான்கு வழி போக்குவரத்து பாலம், நமது படைப்பாற்றல் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்துகிறது. இந்த பாலம் முடிவடைய உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.” என்று கூறினார்.
இந்த பாலம் வெளிநாட்டு நிதி எதும் பெறப்படாமல் முழுக்க முழுக்க வங்காளதேச நிதியிலிருந்து கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.