கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுப் பொங்கல்

Published On:

| By Selvam

Banana Stem Pongal Recipe

வாரத்தின் முதல் வேலை நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த வாழைத்தண்டுப் பொங்கல். ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படும்  நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு, எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் உதவும். அப்படிப்பட்ட வாழைத்தண்டில் செய்யப்படும் இந்த பொங்கல் நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பயத்தம்பருப்பு – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
அரிசி – கால் கிலோ
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
தண்ணீர் – 4 கப்
உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

ஒரு குக்கரில் சிறிது நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வதக்கிக்கொள்ளவும். அதனுடன் அரிசி, பயத்தம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு ஒரு கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து முந்திரி போட்டு வேகவைத்துள்ள சாதத்தில் சேர்த்துக் கிளறினால் வாழைத்தண்டுப் பொங்கல் தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பனீரை எப்படிப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது?

கிச்சன் கீர்த்தனா: பூரி பரோட்டா

இந்தியன் தாத்தாவால் கூட பேச முடியாத ஊழல் : அப்டேட் குமாரு

INDvsZIM : தடுமாறிய ஜிம்பாவே… தொடரை கைப்பற்றியது இந்தியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share