ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை!

Published On:

| By Kavi

மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் மதுரையில் 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி ரேபிடோ நிறுவனம் மோசடி செய்துள்ளதால் மதுரை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

ஏற்கெனவே ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் 2: ’சிவோஹம்’ வீடியோ வெளியானது!

பிரதமர் மோடியிடம் கடிதம் வழங்கிய ராஜாஜியின் பேரன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share