சுருக்கு வலைக்கு தடை:மீனவர்கள் போராட்டம்!

Published On:

| By Kalai

தமிழகத்தில் சுருக்கு வலைக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சுருக்கு வலை, கரை வலை, தூண்டில் வலை உள்ளிட்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதில் சுருக்கு வலையை மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Ban on narrow nets Fishermen protest in Chennai

தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் உள்ள நிலையில் சுமார் 250க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குவலையே பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டு சுருக்கு வலையை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்தது.

கடல்வளம் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்தை இந்த சுருக்குவலை பாதிப்பதாகக் கூறி அதற்கு தடைவிதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடந்தன.

இந்தநிலையில் சுருக்கு வலைக்கு இருக்கும் தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்பட பல்வேறு மாவட்டங்களின் மீனவ கிராமங்களில் இருந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Ban on narrow nets Fishermen protest in Chennai

இதுகுறித்து பேசிய மீனவர்கள், சுருக்கு வலையால் பவளப்பாறை பாதிக்கப்படும் என்பது முற்றிலும் தவறு.

மேலோட்டத்தில் இருக்கும் மீன்களை மட்டுமே சுருக்கு வலையைப் பயன்படுத்தி பிடிக்கமுடியும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சுருக்கு வலைக்கு தடை விதித்து இருப்பதால் வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலையே விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு சுருக்கு வலைக்கு இருக்கும் தடையை நீக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

திமுக தலைவர் பதவி: 12 மணிக்கு வேட்பு மனு செய்கிறார் ஸ்டாலின்

பொதுக்குழு ஏற்பாடு: ஸ்டாலின் ஆய்வு!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share