ADVERTISEMENT

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை!

Published On:

| By Kavi

Ban on collecting fee at toll booths

தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Ban on collecting fee at toll booths

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அந்த மனுவில், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. 2011 முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு நிர்ணயித்தை தொகையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டும் தான் பராமரிப்பு பணிக்காக செலவிடப்படுகிறது. சாலைகள் அமைக்கவில்லை, கழிப்பறை வசதிகள் இல்லை, சாலையோரங்களில் மரம் நடுவதில்லை. எனவே இந்த வழியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று )ஜூன் 3) விசாரணைக்கு வந்தபோது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்யவும் தடை விதித்தது. Ban on collecting fee at toll booths

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share