5 பாகிஸ்தான் வீரர்களை கொன்றது பலூச் தற்கொலைப்படையை சேர்ந்த பெண் : அதிர்ச்சித் தகவல்கள்!

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அக்கோரா கட்டக் மாவட்டத்தில் ரோந்து வாகனத்தில் சென்ற துணை ராணுவப்படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். h women turn suicide bombers

குவாட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலை பலூசிஸ்தான் விடுதலைப்படையினர் நடத்தியதாக சொல்லப்பட்டது. தற்போது, இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலை பெண் ஒருவர் நடத்தியுள்ளார் என்பதுதான் அது.

ADVERTISEMENT

பலூசிஸ்தான் விடுதலைப்படையின் தற்கொலை படை பிரிவை சேர்ந்த( மஜீத் பிரிகேட் ) பானுக் மகிகான் பலூச் என்பவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. அவரின் , புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அறிவியலில் பட்டம் பெற்ற மகிகான் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அனுப்பியிருந்த ஆடியோ மெசேஜூம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆடியோவில் “எனது தியாகம் ஆயிரக்கணக்கான பலூச் மக்களைப் சுதந்திரத்துக்காக போராட ஊக்குவிக்கும். எனது தாய்நாட்டை விடுவித்து, அதற்கு சுதந்திரத்தை கொடுத்து முன்னேற்றத்தையும் ஏற்படுத்த என் உயிரைக் கொடுக்க நான் முன்வந்துள்ளேன்” என்று பானுக் மகிகான் பலூச் தெரிவித்துள்ளார்.Baloch women turn suicide bombers

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைகழகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பல்கலைக்கழகத்துக்குள் சீன பேராசியர்களை வாகனத்தில் அழைத்து வந்த போது,பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.

பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணம் பலூசிஸ்தான். கனிமவளங்கள் நிறைந்த இந்த மாகாணத்து மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக அறிவிக்க போராடி வருகிறார்கள். எனவே, பலூச் இன ஆண்களை கடத்தி சென்று பாகிஸ்தான் ராணுவம் துன்புறுத்தி வருவதாகவும் கொன்று விடுவதாகவும் தகவல் உண்டு. இதனால், பாகிஸ்தான் ராணுவத்தினரை ஏதாவது ஒரு வகையில் பழி வாங்குவதற்காக பலூச் இன பெண்கள் ஏராளமானோர் பலூசிஸ்தான் விடுதலைப்படையில் குறிப்பாக தற்கொலைப்படை பிரிவில் சேர்ந்து வருதாக தெரிகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share