ADVERTISEMENT

4 நாயகிகளுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா

Published On:

| By Kavi

நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய அடுத்த படத்தில் 4 நாயகிகளுடன் நடிக்க உள்ளார்.

62 வயதிலும் இளம் கதாநாயக நடிகர்களுக்கு இணையாக கல்லூரி மாணவராக, ஆக்க்ஷன், ரொமான்ஸ், டூயட் என தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களில் கலர்புல் நடிகராக இருந்து வருகிறார் பாலகிருஷ்ணா. அதனை ரசித்து படத்தை வெற்றி பெற வைக்கவும் ஒரு கூட்டம் தெலுங்கில் இப்போதும் இருக்கிறது.

ADVERTISEMENT

 தெலுங்கு சினிமா ரசிகர்களால் பாலையா என்று கொண்டாடப்படும் பாலகிருஷ்ணா
தற்போது திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, த்ரிஷா, தமன்னா,ஸ்ருதிஹாசன் என அனைத்து முன்னணி நடிகைகளுடனும் நடித்துவிட்டார்.

தெலுங்கு திரையுலகில் இவருடன் நடிக்க கேட்டு அதனை ஏற்க மறுத்து விட்டால் தொடர்ந்து அவர்கள் தெலுங்கு படங்களில் நடிப்பது பிரச்சினை ஆகும் என்பது அங்கு எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

எனவே பாலகிருஷ்ணா படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டால் உடனடியாக மறுக்காமல் சம்மதம் கூறிவிடுகின்றனர். பிற நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க அதிகமான சம்பளம் தரப்படுகிறது என்கின்றனர்.

அது மட்டும் இன்றி பாலகிருஷ்ணா படங்கள் வெற்றிபெற்று விடுவதும் காரணமாகும். இவர் நடிப்பில் இந்த ஆண்டு, ‘வீர சிம்ஹா ரெட்’டி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த நிலையில், அப்பா பாலகிருஷ்ணாவுக்கு  ஜோடியாகவும், அவரது அம்மாவாகவும் ஹனி ரோஸ் நடித்திருந்தார். மகன் பாலைய்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

ADVERTISEMENT

மேலும் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் தங்கையாகவும், வில்லியாகவும், நடித்து இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 108வது படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 21 வயதே நிரம்பிய நடிகை ஸ்ரீலீலா இணைந்தார். அவரை தொடர்ந்து காஜல் அகர்வாலும் நடிக்க ஒப்பந்தமானார்

மேலும் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த ஹனி ரோஸ் இந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தமன் இசையில் உருவாகும் இந்த படத்தை அனில்ரவிபொடி இயக்க உள்ளார்.

இராமானுஜம்

தசரா: விமர்சனம்!

ஓபிஎஸ் மேல்முறையீடு: ஏப்ரல் 20-க்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share