“மனுசனால நீ”… ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான வணங்கான் டிரைலர்!

Published On:

| By Selvam

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் டிரைலர் இன்று (ஜூலை 8) வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்காக படம் பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதைப் போல, இயக்குனர்களுக்காகவும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அந்தவரிசையில் முன்னணியில் இருப்பவர் பாலா.

யதார்த்த சினிமா மூலம் வெகுஜன மக்களின் வாழ்வியலை தனது பாணியில் திரையில் விரிக்கும் பாலாவின் சேது, நந்தா, பிதாமகன், பரதேசி என அனைத்து படங்களும் பல விருதுகளை அள்ளிக்குவித்தது.

அந்தவகையில், தற்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வணங்கான் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

டிரைலர் எப்படி?

முதல் காட்சியிலே கொலை செய்யப்பட்ட உடல்களை போலீஸ் அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி செல்கின்றனர். போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, நம்முடைய கவனத்தை ஈர்க்கிறார்.

”ஒரு குற்றவாளியை என்ன குற்றத்துல அரெஸ்ட் பண்ணிருக்காங்கன்னு அவன் கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்று கண்டிப்புடன் பேசும் நீதிபதியாக மிஷ்மின் மிளிர்கிறார்.

டிரெய்லர் முழுக்க அருண் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் தான் ஆக்கிரமித்துள்ளன. ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.

”மனுசனால நீ” என கோபத்துடன் அருண் விஜய்யை தள்ளிவிடும் காட்சியில் ரோஷினி பிரகாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆக… ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளுடன் பாலாவின் வணங்கான் படம் இருக்கப்போகிறது என்பது ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

100 ரூபாய்க்கு டீன்ஸ் பட டிக்கெட்… பார்த்திபன் கொடுத்த பரிசு!

செந்தில் பாலாஜி மனு : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share