பாலா இயக்கத்தில் சூர்யா, தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுக நாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2022 மார்ச் 28 அன்று தொடங்கியது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள, இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, ஜூலை 20ஆம் தேதி அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் பாலாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்தப் படத்துக்கு ‘வணங்கான்’ என்று பெயர் சூட்டப்பட்டு முதல் பார்வையும் வெளியிடப்பட்டுள்ளது.
– இராமானுஜம்