இஸ்லாமிய சகோதரர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூன் 17) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகின்றனர்.
நபிகளின் தியாகத்தை போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10ஆம் நாள் இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படுகிறது.
அதன்படி அரபு நாடுகளுக்கு பக்ரீத்தை முன்னிட்டு ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என பலரும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் இன்று காலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறினர்.
நாகை மாவட்டம் நாகூர் சிலஸ்லடி தர்கா கடற்கரையில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
அதே போன்று புதுச்சேரி சுல்தான்பேட்டை, சென்னை திருவல்லிக்கேணி, கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி மைதானம், நெல்லை மேலப்பாளையம், சேலம் கோட்டை மைதானம், சூரமங்கலம் ஈத்கா மைதானம் மற்றும் வாணியம்பாடி ஈத்கா மைதானம் ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நாளின் முக்கிய நிகழ்வாக பெருநாள் தொழுகை நடந்த பிறகு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவைகளை பலி கொடுத்து, இதில் கிடைத்த இறைச்சியை தங்களுக்கு மட்டுமின்றி குர்பானியாக ஏழை எளியவர்களுக்கும் தானமாக வழங்கி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
6,890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகளில் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் கண்களுக்கு எவ்வளவு நேரம் ஓய்வு தருகிறீர்கள்?