பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தியாகத்தை உணர்த்தும் வகையிலும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் நோக்கத்திலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் ஜூன் 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிஜ்ரி 1445 துல் கஃதா மாதம் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் ஜூன் 7-ஆம் தேதி அன்று மாலை துல் ஹஜ் பிறை புதுச்சேரியில் காணப்பட்டது.
ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் ஜூன் 8-ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஈதுல் அத்ஹா (பக்ரீத்) திங்கட்கிழமை ஜூன் 17-ஆம் தேதி கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் எடப்பாடி ஆலோசனை வரை!