ADVERTISEMENT

பக்ரீத்: கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Published On:

| By Monisha

Bakrid Additional special buses

பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படும் நிலையில் தொடர்ந்து வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று (ஜூன் 28) தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், தங்களது பயணத்துக்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT

எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

பருவ மழைக்கு முன்பே சாலைகள் சீரமைப்பு : எ.வ.வேலு உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்…  திமுக ரோல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share