விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம்… பகுஜன் சமாஜ் எதிர்ப்பு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து வைத்தார். அடர் சிவப்பு , மஞ்சள் வண்ணத்திலான இந்த கொடியில் நடுவில் வாகை மலரும், அதன் இருபுறமும் யானை சின்னமும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் ’யானை’. தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி சிக்கிம், அசாம் மாநிலம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையை எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது என்று தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

எனவே யானை சின்னத்தை உடனே அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  ஆனந்தன் விஜய்யின் மேலாளரிடமும் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக ஆனந்தன் கூறுகையில், “1968ஆம் ஆண்டு சின்னம் ஒதுக்கீடு சட்டப்படி தேர்தல் ஆணையம் 2003ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்து, 2004ல் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த வகையில் யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில/ தேசிய கட்சிகள், அங்கீகரிப்பட்ட/ அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என யாரும் பயன்படுத்தக் கூடாது.

கட்சியின் கொடியை தவெகவினர் தயாரிக்கும் போது இந்த தகவல் அவர்களுக்கு தெரியவந்திருக்காது என்பது தெரியவருவதால் எங்களுடைய கட்சித் தலைமை அறிவுரைபடி தவெக தலைமை மேனேஜருடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசினோம்.

தேர்தல் ஆணைய சட்ட ஆவணங்களையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் கட்சி ஆங்கிலத்தில் TVK என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தசூழலில் விஜய் கட்சியை அறிவித்த போது ஆங்கிலத்தில் TVK என அழைக்கவும் எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

நடிகையின் மேல் கை வைத்த டைரக்டர்… பிரபல டைரக்டரை காலரை பிடித்து தூக்கிய தந்தை!

ICC-யின் தலைவராக தேர்வாகப்போகும் ஜெய்ஷா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share