வைஃபை ஆன் செய்ததும், “பனிகாலத்திலும் இப்படி ‘உக்கிரமாக’ அடிதடியா?” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா ‘உக்கிர’ அடிதடி?
விஜய்யின் தவெகவில் தான் திடீரென உட்கட்சி விவகாரம் வெடிச்சிருக்கே.. பனையூர் ஆபீசுக்கே ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் படையெடுத்து போறதும் அங்க இருக்கிறவங்க சமாதானப்படுத்தி பேசி அனுப்புறதும் சகஜமாகிடுச்சு..
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..
அப்படிதான் நினைச்சா.. இப்ப தற்கொலை முயற்சி வரைக்கும் போயிருச்சே.. அஜிதா என்ற பெண் தூத்துக்குடியில தவெகவுக்காக ஆக்டிவ்வாக வேலை செஞ்சாங்க.. மா.செ. பதவி எப்படியும் கிடைச்சுடும்னு நம்பிக்கையா இருந்தாங்க அஜிதா.. ஆனா வேறு ஒருத்தருக்கு மா.செ. பதவி கொடுத்ததால ரொம்ப டென்ஷனாகிட்டாங்க..
நேரா பனையூருக்கு போய் விஜய் காரை வழிமறிச்சு போராட்டமும் செய்யப் போய் ‘தலைப்பு செய்திகளில்’ இடம் பிடிச்சுட்டாங்க..
இதுக்காகவா தற்கொலை முயற்சி செஞ்சாங்க?
அதான் இல்லையாம்.. தவெகவில மா.செ. பதவி கிடைக்காத வருத்தத்துல போராட்டம், தர்ணான்னு அஜிதா ஈடுபட்டாலும் ஒருவிதமான நம்பிக்கையோடு காத்திருந்தாராம்..
இதுக்கு இடையில, போன செவ்வாய்க்கிழமை பனையூரில் தவெக மா.செ.க்கள் கூட்டம் நடந்துச்சு.. அதுல புஸ்ஸி ஆனந்த் பேசுன பேச்சுதான் அஜிதாவை தற்கொலைக்கு தூண்டிவிட்டிருச்சுன்னு சொல்றாங்க..
அப்படி என்னப்பா புஸ்ஸி ஆனந்த் பேசிட்டாரு?
இதை பத்தி தவெக தரப்புல கேட்டப்ப, மா.செ.க்கள் கூட்டத்துல பேசுன ஆதவ் அர்ஜூனா, “SIR-ல் நீக்கப்பட்டதுல பெரும்பாலான ஓட்டுகள் நம்முடையதுதான். . நம்மோட ஓட்டர்ஸ் 35 லட்சம் பேரைத்தான் பாஜகவும் திமுகவும் சேர்ந்து சதி செஞ்சு தூக்கிட்டாங்க.. இதை மா.செ.க்கள் விடக்கூடாது.. நீக்குனவங்க பேரை எல்லாம் சேர்க்கனும்” என சீரியசாக பேசினார்..
அதே மாதிரி புஸ்ஸி ஆனந்த், மா.செ.க்களுக்கு கிளாஸ் எடுத்தார். அதோட, தூத்துக்குடி அஜிதா மேட்டரைப் பத்தியும் பேசுனாரு.. அப்ப, ‘தலைவரோட காரையே வழிமறிச்சுருச்சு அந்த பொண்ணு.. இனி கட்சியில அந்த பொண்ணுக்கு எந்த ஒரு பதவியுமே கிடைக்கவே கிடைக்காது.. அதனால கட்சிக்காரங்க யாரும் இப்படி எல்லாம் சண்டை போடலாம்னு நினைச்சுகூட பார்க்க கூடாதுன்னு” ரொம்பவே காட்டமா வார்னிங் கொடுத்தாரு” என்றனர்.
மா.செ.க்கள் கூட்டத்துல புஸ்ஸி ஆனந்த் இப்படி பேசுனதுக்கு அப்புறமா, “தவெகவுக்கு இவ்வளவு காலம் பாடுபட்டு எல்லாமும் வீணா போச்சு.. புஸ்ஸியும் இனி பதவியே கிடைக்காதுன்னு சொல்லிட்டாரேன்னு..” அஜிதா ரொம்பவே புலம்பியிருக்காங்க.. அந்த விரக்தியிலதான் தூக்க மாத்திரைகளை அதிகமா சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்காங்களாம்.. தவெகவுல மா.செ. பதவி கிடைக்காத பலரும் இப்ப புஸ்ஸியோட பேச்சுதான் அஜிதாவோட தற்கொலை முயற்சிக்கு காரணம்னு கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க.. இதுவும் பனையூரில் கூடிய சீக்கிரமாக வெடிக்கும் போல.. என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
