இரட்டை சகோதரிகள்… குழம்பி போன குழந்தை: க்யூட் வீடியோ!

Published On:

| By Monisha

இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் பார்த்த குழந்தை முக பாவனைகளை மாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓரே மாதிரியாக இருக்கக்கூடிய இரட்டையர்களை பார்க்கும்போது சிலர் குழம்பிவிடுவார்கள். அப்படிதான் ஒரு குழந்தை தன்னுடைய தாயின் சகோதரியைப் பார்த்துக் குழம்பிப் போகிறது.

ADVERTISEMENT

இரட்டை சகோதரிகளாக இருக்கும் அவர்களில் ஒருவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்த குழந்தை ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, இரட்டை சகோதரிகளில் ஒருவர் அந்த இடத்திற்கு வருகிறார். அவரை பார்த்த அந்த குழந்தை தன்னுடைய தாய் என்று அழகாக சிரிக்கிறது. அவரை பின் தொடர்ந்து சகோதரியும் அந்த இடத்திற்கு வருகிறார்.

தன் தாய் போலவே இருக்கும் மற்றொரு சகோதரியை பார்த்த குழந்தை, முக பாவனையை மாற்றுகிறது. இரண்டு சகோதரிகளையும் தலையைத் திருப்பி திருப்பி பார்த்துக் குழம்பி போகிறது. இறுதியாக தன்னுடைய தாயை அடையாளம் கண்டு அந்த குழந்தை சிரிக்கிறது.

ADVERTISEMENT

க்யூட்டாக முக பாவனையை மாற்றி குழம்பிப் போகும் குழந்தையின் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த இணையவாசிகள், ”அந்த குழந்தைக்கு தன்னுடைய தாய் யார் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது”.

க்யூட்டான குழந்தை என்று பலரும் அவர்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

மோனிஷா

கடைசி பந்து… த்ரில் வெற்றி: பெங்களூருவை கலங்கடித்த லக்னோ!

ஆதரவு நிலைப்பாடே இந்தியாவுக்கான சரியான தேர்வு: உக்ரைன் அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share