ADVERTISEMENT

Babri Masjid TimeLine: ரத்த ஆறு ஓட வைத்த பாபர் மசூதி இடிப்பு நாள் டிச.6- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Babri Masjid Timeline

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழமையான பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு இதே டிசம்பர் 6-ந் தேதி இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரை மட்டமாக்கினர். அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மிகப் பெரும் மத மோதல்கள் வெடித்து ரத்த ஆறு ஓடியது.

இந்திய வரலாற்றின் துயரம் தோய்ந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான நிகழ்வுகளின் தொகுப்பு:

ADVERTISEMENT

1528: முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.

1853: இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டி வன்முறைகள் நிகழ்ந்தன.

ADVERTISEMENT

1859: பாபர் மசூதி விவகாரத்தில் தலையிட்ட பிரிட்டிஷ் அரசு

  • முஸ்லிம்கள் உள்ளே தொழுகை நடத்த
  • இந்துக்கள் வெளிப்புற முற்றத்தில் வழிபட என இரண்டாகப் பிரித்தது.

1949: ராமர் சிலைகள் பாபர் மசூதி இடத்துக்குள் வைக்கப்பட்டதால் சர்ச்சைக்குரிய சொத்தாக உருமாறியது. முஸ்லிம்கள், பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதையும் நிறுத்தினர்.

ADVERTISEMENT

1950,1960களில் பாபர் மசூதி தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

1984: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான குழுவை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்தது.

1990: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.

1992 டிசம்பர் 6: அயோத்தியில் பல நூற்றாண்டுகளாக இருந்த பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரை மட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் இந்து- முஸ்லிம் மோதல்கள் மிகப் பெரிய அளவில் வெடித்தன.

1992: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை விசாரிக்க லிபர்ஹான் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது

1993: அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் உலகை அதிரவைத்த மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பல நூறு உயிர்கள் பலியாகின.

2002: அயோத்திக்கு சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் பயணித்த ரயில், குஜராத்தில் தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து குஜராத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.

2009: 17 ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் லிபர்ஹான் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்தது.

2010: அயோத்தி பாபர் மசூதி நிலத்தை இந்துக்கள்- முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2017: அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டது.

2019: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இடிக்கப்பட்ட நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது; முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள வேறு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

2020: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது; பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

2024: அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share