ADVERTISEMENT

மோடியால் தடுக்க முடியும்!: அமீர்கான்

Published On:

| By Balaji

நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் அமீர்கான் பேட்டியளித்திருந்தார். அவர் பேசியதாவது, “இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு என்று நான் கூறவில்லை. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது என்றுதான் தெரிவித்தேன். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தலைவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து வருகிறார்கள். பிரதமர் மோடி நினைத்தால் அதைத் தடுக்கமுடியும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “அரசாங்கம் வேண்டுமானால் என்னை ப்ராண்ட் அம்பாசிடர் பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம். ஆனால், இன்னமும் இந்தியாவுக்காக பேசி வருகிறேன். நான் இந்தியாவை என் தாயைப்போலத்தான் பார்க்கிறேன். நான், என் தாயை ஒருபோதும் பிராண்டாகக் கருதமுடியாது” என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share