புதிய ஸ்டைலில் அதா சர்மா

Published On:

| By Balaji

பிரபுதேவாவுடன் நடனமாடிய பிறகே தான் புதிய நடனத்தைக் கற்றுக்கொண்டதாக நடிகை அதா சர்மா தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரபு, பிரபுதேவா, காயத்ரி ரகுராம், அபிராமி ஆகியோர் நடித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் சார்லி சாப்ளின். இந்தப் படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சார்லி சாப்ளின் 2 என்ற பெயரில் இயக்கிவருகிறார் ஷக்தி சிதம்பரம்.

இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, தன்யா, அதா சர்மா, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பிரபுதேவாவுடன் நடனம் ஆடிய அனுபவம் குறித்து வீடியோ ஒன்றைத் தனது [ட்விட்டரில்](https://twitter.com/adah_sharma/status/971308861335506944) பகிர்ந்துள்ளார் அதா சர்மா.

அதில், “சார்லி சாப்ளின் 2வில் பிரபுதேவாவுடன் நான் நடனமாடிய ஒரு பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகு, நான் நடனத்தில் புதிய ஸ்டைலைக் கற்றுக்கொண்டேன். எல்லோரும் என்னை மீண்டும் நடன வீடியோக்களை வெளியிடுமாறு கேட்கிறார்கள். விரைவில் வெளியிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அதா சர்மா இந்தப் படத்திற்காக அம்ரேஷ் இசையமைப்பில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share