**தேவையானவை:**
வாழைக்காய் – 1
சின்ன வெங்காயம் – 6
காய்ந்த மிளகாய் – 1
சீரகப்பொடி – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**செய்முறை:**
வாழைக்காயின் தோலை சீவி நீக்கி விடவும். சிறிய சதுர துண்டுகளாக வாழைக்காயை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து சேர்க்கவும். கடுகு பொரிந்த பின் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும். இத்துடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வாழைக்காயைச் சேர்த்து இரண்டு, மூன்று நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், சீரகப்பொடி சேர்த்து மசால் நன்கு பரவும்படி கிளறிவிடவும். இடை இடையே சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வாழைக்காயை முழுமையாக வேகும்படி செய்யவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கடைசியாக தேவையான அளவு உப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
**கீர்த்தனா சிந்தனைகள்:**
முத்தத்தில் முடிக்காமல் குழந்தைக்குத் தலைசீவ அம்மாக்கள் பழகவே இல்லை.
