பிரெட் ஸ்லைஸ் – 8 (4 சாண்ட்விச்சுக்கு)
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் (டோஸ்ட் செய்ய)
தக்காளி – வட்டமாக நறுக்கிய ஸ்லைஸ் 15
பிளாக் பீன்ஸ் – அரை கப் (வேக வைத்தது)
வெள்ளரி – வட்டமாக நறுக்கிய ஸ்லைஸ் 15
சீஸ் துருவல் – சிறிதளவு (விருப்பமானால்).
ஆல் பர்பஸ் சீசனிங் – சிறிதளவு
கார்லிக் பவுடர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – அலங்கரிக்க
பிரெட்டை வெண்ணெய் விட்டு லேசாக டோஸ்ட் செய்யவும். ஒரு பவுலில் பிளாக் பீன்ஸ், கார்லிக் பவுடர், ஆல் பர்பஸ் சீசனிங், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பிரெட்டின் மேல் பீன்ஸ், சீஸ் துருவல் தூவி, மேலே கடைசியாக ஒரு பிரெட் ஸ்லைஸ் கொண்டு மூடவும். கிரில்லில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சீஸ் உருகியும், பிரெட் கருகாமலும் இருப்பது அவசியம். பரிமாறும்முன் தக்காளி, வெள்ளரி, மல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.
**கீர்த்தனா தத்துவம்:**
பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கலாம். ஆனா, அடுப்பு இல்லாமல் சாம்பார் வைக்க முடியாது.
