ADVERTISEMENT

இயற்கையை வியக்கும் கணம்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பார்கள். மனித குலத்தின் கண்டுபிடிப்புகள் பலவும் இயற்கையைப் பார்த்து மனிதன் ‘போலச் செய்ய’ முயன்றதன் விளைவுகளே.

இயற்கை என்பது முழுவதும் பிரதியெடுக்க முடியாத படைப்பு என்பது பலமுறை நிரூபணமாகியுள்ளது.

ADVERTISEMENT

தொழில்நுட்பத்தின் உச்சபட்ச அறிவினால் சாத்தியமாகும் படைப்புகளாலும் இயற்கையின் மீதான வியப்பு மேலும் ஒரு பங்கு அதிகரிக்கத்தான் செய்கிறது.

கவிக் கண் கொண்டு பார்த்தால் மட்டுமே இயற்கையை வியத்தலைத் தவிர வேறொன்றும் செய்யலாகாது என்பது விளங்கவரும்.

ADVERTISEMENT

தேவதச்சன் எழுதிய கவிதை ஒன்று இயற்கையை வியக்கும் கணத்தையையும், இயற்கையின் முன் மனிதனின் இயலாமையையும் லாவகமாகச் சொல்லிச் செல்கிறது.

*காற்றில் வாழ்வைப் போல*

ADVERTISEMENT

*விநோத நடனம் புரியும்*

*இலைகளைப் பார்த்திருக்கிறேன்.*

*ஒவ்வொருமுறையும் இலைகளைப்*

*பிடிக்கும்போது*

*நடனம் மட்டும் எங்கோ*

*ஒளிந்துகொள்கிறது.”*

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!](https://minnambalam.com/k/2019/05/28/80)

**

.

.

**

[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)

**

.

**

[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)

**

.

**

[நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!](https://minnambalam.com/k/2019/05/28/53)

**

.

.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share