ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக முகமது அசாருதீன் இருந்த காலத்தில், ரூ.20 கோடி அளவுக்கு நிதிமுறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜரானார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் , ஹைதரபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தார்.
இந்த காலக்கட்டத்தில்,ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு ஜெனரேட்டர்கள், கூடாரங்கள், தீயணைப்பு கருவிகள் உட்பட பல பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குப்பின் மிக தாமதமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் செலவுகள் அதிகரித்து கொண்டே சென்றுள்ளன.
கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தனியார் நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து ஒப்பந்ததாரர்களுக்கு சந்தை விலையை விட கூடுதல் தொகைக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். பல ஒப்பந்ததாரர்களுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் , அவர்கள் எந்தப் பணியும் செய்யவில்லை என போலீஸாரின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தெலங்கானா மாநிலத்தில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தியது. அதில் ரூ.10.39 கோடிக்கு போலி ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.10.39 கோடி ஆகியவை பிடிபட்டது.
இது குறித்த விசாரணைக்கு நேற்று ஆஜராகும்படி முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.இதையடுத்து, அசாருதீன் இன்று அமலாக்கத்துறையில் ஆஜர் ஆனார். செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், தன் மீது போலியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, மேலும் தகவல்களை கூறுவேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சொத்துவரி உயர்வு: திமுக அரசைக் கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்!
விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்…தடுமாற்றத்தில் டீலர்கள்!
Comments are closed.