கஜகஸ்தான் நாட்டில் விமானம் தீ பற்றி எரிந்து விழுந்ததில், 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அசர்பைஜான் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் குரோன்ஸி நகருக்கு சென்று கொண்டிருந்தது.
விமானத்தில் 100 பயணிகளும் 5 ஊழியர்களும் இருந்தனர். விமானம் இறங்க வேண்டிய குரோன்சி நகரில் அதிக பனி மூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் போனது. இதையடுத்து, கஜகஸ்தானின் அக்டாவு நகருக்கு திருப்பி விடப்பட்டது
அக்டாவு விமான நிலையத்தை நெருங்க 3 நிமிடங்களே இருந்தது. அப்போது, விமானத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து, மிக வேகமாக விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார்.
விமானத்தினுள் கடைசி காட்சிகள்… பயணிகள் நிலை
இந்த சமயத்தில் முற்றிலும் தீ பற்றி கட்டுப்பாட்டை இழந்த விமானம் தீ பிடித்த பந்து போல தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 60 பேர் இறந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் பணியில் கஜகஸ்தான் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இறப்பு குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால், விமானம் உருகுலைந்து கிடப்பதை பார்த்தால், ஏராளமான பயணிகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் பிரேசிலில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற குட்டி விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 10 பயணிகள் இறந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!
‘என் மகனே இறந்து போயிட்டான்’- நடிகை திரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு!