அயோத்தியில் நிறுவப்பட்ட பால ராமர் சிலை: சிறப்பம்சங்கள் என்ன?

Published On:

| By Selvam

Ayodhya Ramar temple statue specification

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று (ஜனவரி 22) ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மதியம் 12.30 மணிக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பால ராமர் சிலையின் சிறப்பம்சங்கள்!

ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் கோயிலின் கருவறைக்குள் ஜனவரி 19-ஆம் தேதி ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது.

ADVERTISEMENT

குழந்தை ராமர் சிலையானது 4.24 அடி உயரம், 3 அடி அகலம், 200 கிலோ எடைகொண்டது. இந்த சிலை ராம் லல்லா என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலையானது கோவிலின் தரை தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிவமைத்துள்ளார்.

ADVERTISEMENT

ஐந்து வயது தெய்வத்தின் முகபாவனைகள், அப்பாவித்தனம் மற்றும் உடல் அம்சங்கள் மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றை சிறப்பாக சித்தரிக்கும் விதமாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள கருமையான பாறைகளில் இருந்து இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.

ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு ராமரின் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக விழும்படி ராமர் கோவிலில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு தண்ணீர், பால் அபிஷேகம் செய்தாலும் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் சிலையின் கீழ் பகுதியில், நவகிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு, கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.

ராமர் விஷ்ணுவின் அவதாரமாக இருப்பதால் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆசமனம், பவித்ரம்: ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த மோடி

ராமர் சிறப்பு பூஜை:  கோயிலில் மணியடித்த இஸ்ரேல் தூதர்

ஐபிஎல் 2024: தொடக்கம் மற்றும் இறுதிப்போட்டி எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share