உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் மதுபான கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 11,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ராஜஸ்தானில் வரும் 22-ம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டிலும் மதுபான கடைகளை மூட அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
சீறும் காளைகள்… பாயும் காளையர்கள் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
