ராமர் கோயில்: திரும்பிவந்த 15,000 காசோலைகள்!

Published On:

| By Balaji

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் வசூலித்த 22 கோடி ரூபாய் மதிப்பிலான 15,000 காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுவரை 5,000 கோடி ரூபாய் வசூலானதாகக் கூறப்படுகிறது. இறுதி தொகை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட 15,000 காசோலைகள் கணக்கில் பணம் இல்லாதது உட்பட பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் திரும்ப வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காசோலைகளின் மதிப்பு 22 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதில் 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை.

ADVERTISEMENT

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக திரும்பிவந்த காசோலைகளைத் திரும்ப வங்கியில் செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

ADVERTISEMENT

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share