லோகேஷை சீண்டிய அயலான் தயாரிப்பாளர்?

Published On:

| By Selvam

ayalaan producer kj rajesh attack lokesh kanagaraj

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி கொண்டிருக்கும் Sci-Fi திரைப்படம் அயலான். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

அயலான் படம் 4,500 VFX காட்சிகள் கொண்ட லைவ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ADVERTISEMENT

பல தடைகளுக்குப் பிறகு பொங்கலுக்கு அயலான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அயலான் படத்தின் தயாரிப்பாளர் KJ ராஜேஷ் பேசியது வைரலாக பரவி வருகிறது.

அயலான் இசை வெளியீட்டு விழாவில் ராஜேஷ் பேசியதாவது,

ADVERTISEMENT

“தெலுங்கு திரையுலகிற்கு எப்படி பாகுபலி ஒரு அடையாளமாக இருக்கிறதோ அப்படி தமிழுக்கு அயலான் படம் இருக்கும். ஜனவரி 5ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும்.

இது அயலான் பொங்கல். சிஜி விஷயங்களில் தமிழில் ஒரு முன்மாதிரியான படமாக அயலான் இருக்கும்.

அயலான் படம் ஏற்கெனவே ஒரு பிளாக் பஸ்டர். நாங்கள் ஏலியனை நம்புகிறவர்கள். பவுடர் ( போதை பொருள்) , ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புகிறவர்கள் அல்ல” எனக் கூறியுள்ளார்.

ராஜேஷ் லோகேஷ் கனகராஜை தான் குறிவைத்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை: ஜனவரி 14-ல் மணிப்பூரில் துவக்கம்!

சென்னையில் நாளை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கேரள முதல்வர் பங்கேற்கிறார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share