பொதுவாக… அரிசி, கோதுமை உணவுகளை அளவுடன் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களை தாராளமாகச் சாப்பிட வேண்டும். பால், அசைவ உணவுகளைக் குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.
எண்ணெய், சர்க்கரை, உப்பை மிகக் குறைந்த அளவே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அனைவருக்குமே அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் இதயத்துக்கு நலம் சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
“எந்த எண்ணெய் குளிர வைக்கும்போது உறைந்துவிடுகிறதோ, அதில் மிக அதிக அளவு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.
உதாரணம்… நெய், வெண்ணெய், வனஸ்பதி. இதில் உள்ள ‘பூரிதக் கொழுப்பு’ (Saturated Fat) இதய நலத்தை பாதித்து, மரணத்துக்கான அபாயத்தை அதிகரிக்கும்.
ரசாயன தொழிற்சாலைகளில், சில தாவர எண்ணெய்களை அதிக கொதிநிலையில் ஹைட்ரோஜெனேஷன் (Hydrogenation) செய்யும்போது கெட்டியாகி, அதிக நாள்கள் கெடாமல் இருக்கும் தன்மையைப் பெறும்.
இதை உலகில் எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லவும், தேவையானபோது உபயோகிக்கவும் முடியும்.
இந்த எண்ணெயில் தயாராகும் உணவுகளான சாக்லேட், பிஸ்கட், கேக், குக்கீஸ், பீட்ஸா, போன்றவற்றை உட்கொள்வதால் இவற்றிலுள்ள பூரிதக் கொழுப்பு, நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் ‘ஹெச்டிஎல்’ (High-density Lipoprotein)- அளவைக் குறைத்து, கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் ‘எல்டிஎல்’ (Low-Density Lipoprotein – LDL) ரத்தத்தில் கலந்து, ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் ஏற்படக் காரணமாகும்.
இன்றைய காலகட்டத்தில் சிறு வயதினரும் உடல் பருமனாகி மாரடைப்பு வர முக்கிய காரணம், இத்தகைய எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளே.
ஒரே எண்ணெயில் பலமுறை காய்ச்சி, உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்போதும் மேற்குறிப்பிட்ட தீமைகள் ஏற்படும்.
இதய நலத்தைப் பொறுத்தவரை உங்கள் உணவைக் கண்காணிப்பதைத் தவிர, தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடற்பயிற்சி உங்கள் இதயத்தை ஒவ்வோர் இதயத் துடிப்பிலும் அதிக ரத்தத்தை பம்ப் செய்யும்.
இது நிகழும்போது, அது உங்கள் உடலுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்கும். உங்கள் உடலின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
உடலின் சீரான செயல்பாடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும்” என்கிறார்கள் இதயநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: சிறுத்தைக் கணக்கு… ஸ்டாலின் ஆலோசனை!
திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு