தமிழகமே எதிர்பார்த்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
வாடிவாசலிலிருந்து முதலில் அவிழ்த்துவிடப்பட்ட மாட்டை அடக்கிய இளைஞருக்கு அமைச்சர் மூர்த்தி ஒரு தங்கக் காசை பரிசாக வழங்கினார்.
அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலையில், மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.
800காளைகள், 300 வீரர்கள், இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக முதல்வர் சார்பில் காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு பைக்குகளும் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர சைக்கிள், தங்கக் காசு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
3 பேருக்குக் காயம்
இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் அழைத்து வரும் போதே மாடுகள் முட்டி 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று போட்டி நடைபெறும் இடத்தில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் அடங்கிய 3 மருத்துவர் குழு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளன.
பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றுள்ளனர்.
பிரியா–
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
மகப்பேறு சலுகை: போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அபராதம் – மகப்பேறு சட்டம் சொல்வது என்ன?
