அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த இருபது பேர் பங்கேற்றனர்.
அப்போது ‘அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி’ என்ற கமிட்டி பெயரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்த அவனியாபுரம் விழா குழுவினர், அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம விழா குழுவினருக்கு அனுமதி அளிக்காதபட்சத்தில், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து அலுவலக வளாகத்தினுள் போராட்டம் நடத்தியபடி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவனியாபுரம் பகுதியை சேர்ந்த அன்பரசன், சுரேஷ், செல்வக்குமார், பிச்சைராஜன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலை.ரா
“ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை” – ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
‘ரெட் ஜெயண்ட்’ என்று சொல்ல பயமா?: திருமாவுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!