ஆவணி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதைத் தலைகனமாக மாற்றிக்கொள்ள வேண்டாம்.

அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். திட்டமிட்டு செயல்பட்டால், நன்மைகள் தொடரும் பதவியுடனான இடமாற்றம் வந்தால் மறுக்க வேண்டாம். பொறுப்புகளை நேரடி கவனத்துடன் செய்வது அவசியம்.

குடும்பத்தில் உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும்.

இளம் வயதினர் சுபகாரியத்தில்  பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும்.

புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு  ஆதரவு சீராக இருக்கும். சட்டப்புறம்பின் நிழலையும் தவிருங்கள்.

படைப்புத் துறையினர் திட்டமிடலில் சறுக்கல் கூடாது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள்.  வாகனத்தில் சிறு பழுதும் உடன் சீர் செய்யுங்கள். வேகத்தைத் தவிருங்கள்.

முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகள் வரலாம். பிள்ளையாரைக் கும்பிடுவது பெருமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.20 லட்சம் வாடகை பாக்கி : யுவன் சங்கர் ராஜா மீது புகார்!

பெண் ஐபிஎஸ் அதிகாரி குறித்து ஆபாச பதிவு : ஜோதிமணி கண்டனம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share