–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
உழைக்கத் தயாராக இருந்தால், உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உயரதிகாரிகளால் உணரப்படும்.
எந்த சமயத்திலும் சரியான திட்டமிடல் இருந்தால், இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரும். புதிய பணி தேடுவோர், வீண் ரோஷம் தவிருங்கள். பணி கைகூடி வரும் முன் பகட்டு வேண்டாம்..
இல்லத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க வாய்ப்புகள் வரும். கடன்கள் சுலபமாக அடைபடும். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அக்கம் பக்கத்தில் அதிக நெருக்கம் வேண்டாம்.
தொழிலமைப்பில் அவசர முதலீடுகள் தவிருங்கள். வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள். அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள்.
மேலிடத்தின் கட்டளைகளை கனவிலும் மீறவேண்டாம். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு பெருமை கலை, படைப்புத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பலன்கிடைக்கத் தொடங்கும்.
எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு உயர்வுகள் உருவாகத்தொடங்கும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். முதுகு, அடிவயிறு, தோள்பட்டை, ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு ரம்யமாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
ஆவணி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
கார், பைக் ஷோரும் டீலர்களின் வேட்டை… ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்
”வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர்”: பிரதமர் மோடி புகழாரம்!