விஜய் ஹசாரே கோப்பை: அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்

இதனால், ருதுராஜ் முதல் 61 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே சேர்த்து, நிதானமாக விளையாடி வந்தார்.இதனால், ருதுராஜ் கெய்க்வாட்டும் நெருக்கடி காரணமாக ஆட்டமிழந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். முதல் 61 பந்துகள் நிதானமாக விளையாடிய இவர், அடுத்த 64 பந்துகளில் 83 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் 131 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 108 ரன்கள் எடுத்தார்

தொடர்ந்து படியுங்கள்

அவரை நான் வெறுக்கவும் செய்கிறேன், நேசிக்கவும் செய்கிறேன் – மனம் திறந்த பின்லேடன் மகன்

என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை. எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் வரையும் ஓவியங்கள்தான் என்னை நிம்மதி அடைய வைக்கின்றன.ஓவியம் தான் என்னை தனித்துவமான நபராக விளங்க வைக்கிறது ” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும்: முதல்வருக்கு சு.சுவாமி கடிதம்!

அரசியல் சாசன விதிகள் 25, 26ன் படியும், சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்பின் படியும் கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ( டிசம்பர் 1 ) கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: மன்னிப்பு கேட்கிறேன்-ஆனால்? நாடவ் லாபிட்

இந்தத் திரைப்படம் ஒரு சித்தரிக்கப்பட்ட மோசமான வன்முறையைப் பயன்படுத்தியது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கோபத்தில் இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் படத்தைப் பற்றி யாராவது அப்படிப் பேசினால் நானும் கோபப்படுவேன். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், உண்மைகள் என்ன என்பதுதான் எனது கேள்வி என்பது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என, கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லைகர் பட சிக்கல்.. நொந்து போன பெண்களின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை நீடித்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup :சவுதி அரேபியாவை வீழ்த்தியது மெக்சிகோ

பின்னர், ஆட்ட நேர முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சவுதி அரேபியா வீரர் அல் தவ்சாரி 90-வது கோல் அடித்தார். ஆனால் அந்த கோல் அணியின் வெற்றிக்கோ, டிரா செய்வதற்கோ இயலாமல் போனது.

தொடர்ந்து படியுங்கள்

தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை:யார் இந்த நாடவ் லேபிட்

திரைப்பட திருவிழாவின் நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

48,500 ஆண்டுகள் உறைந்திருந்த ஜாம்பி வைரஸ்: மனிதர்களுக்கு ஆபத்தா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தியது. இந்தியா, சீனா ,அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி எந்தவொரு உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை. இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. அதேநேரம் உலகில் இருக்கும் மற்ற பல்வேறு வகையான வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்