ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் டொனால்ட் சாம்ஸ். 91 வயதான இவரின் தந்தை பிரிட்டிஷார் காலத்தில் அஸ்ஸாமில் பணியாற்றியவர். இதன் காரணமாக இந்தியா மீது டொனால்ட் சாம்சுக்கு தனி பற்று உண்டு. சிட்னியில் வசித்தாலும் இந்தியாவுக்கு அடிக்கடி வருவார். அப்படி, வரும்போதெல்லாம் அஸ்ஸாம் மாநிலத்துக்கும் விசிட் அடிப்பார். மேலும், தான் இறந்து போனால், தனது உடலை இந்தியா கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டுமென்று மனைவியிடம் டொனால்ட் சாம்ஸ் கூறியிருந்தார்.. Australian man buried in india
இந்த நிலையில், தனது வாழ்க்கையில் 12வது முறையாக இந்தியாவுக்கு 41 பேர் கொண்ட குழுவுடன் சில நாட்களுக்கு முன்பு சாம்ஸ் வந்தார். அவருடைய மனைவி அலீசும் உடன் வந்திருந்தார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து பாட்னாவுக்கு கங்கை நதியில் டூரிஸ்ட் கப்பலில் சாம்ஸ் குழுவினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று டொனால்ட் சாம்ஸ் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக, அவரை பீகார் மாநிலம் முன்கர் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். பின்னர், அவரின் உடல் முன்கர் நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. Australian man buried in india
தொடர்ந்து, சாம்சின் மனைவி தனது கணவரின் உடலை அவரின் இறுதி ஆசைப்படி இந்தியாவிலேயே நல்லடக்கம் செய்ய விரும்பினார். இது தொடர்பாக, ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மேலும், தனது கணவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாமென்று அலீஸ் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு சாம்சின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. Australian man buried in india
தொடர்ந்து, ஆஸ்திரேலிய தூதரகத்தின் வழிகாட்டுதல்படி டொனால்ட் சாம்ஸின் உடல் முன்கர் நகரிலுள்ள கிறிஸ்த கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பாதிரியார்கள் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். குழி தோண்டி மண்ணுக்குள் வைக்கப்பட்ட சாம்சின் உடலுக்கு அவரின் மனைவி மண் அள்ளி போட்டும் மலர் மாலைகள் வைத்தும் இறுதி மரியாதை செய்தார். சாம்சின் சுற்றுப்பயணத்தின் போது, உடன் வந்த மற்ற ஆஸ்திரேலியர்களும் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். Australian man buried in india
இது குறித்து சாம்சின் மனைவி அலீஸ் கூறுகையில், ‘ எனது கணவர் இந்தியாவுடன் நெருங்கிய பந்தம் கொண்டவர். தான் இறந்தால் உடலை இந்தியா கொண்டு சென்று புதைக்கும்படி கூறியிருந்தார். இந்தியா வந்த போதே, அவர் மரணமடைந்தது எனக்கு வியப்பை தருகிறது. இந்திய மண்ணில் எனது கணவரை புதைத்து அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றி விட்டேன்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். Australian man buried in india