ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி-20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜேம்ஸ் ஃபாக்னர் 5 விக்கெட்டுகளை எடுத்ததால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.