2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது. தற்போது, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள தங்களது வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றிருக்க, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அணியின் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரில் அசத்திவந்த டிம் டேவிட், ஜேசன் பெஹ்ரேன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், மேட் ஷார்ட் உள்ளிட்டோருக்கும், இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான மிட்சல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் ஆகியோருக்கு இந்த தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, அந்த அணியின் ஆஸ்தான ஆல்-ரவுண்டர்களாக கருதப்படும் மிட்சல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. உலகக்கோப்பைக்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணியை மிட்சல் மார்ஷே வழிநடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், தற்போது இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிவரும் இவர்கள், அந்த தொடர் முடிந்தவுடன் நாடு திரும்பவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/CricketAus/status/1718108713645650046
ஆஸ்திரேலிய அணி விவரம்:
மேத்யூ வேட் (c) (wk), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மர்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஷ், ஜேசன் பெஹ்ரேன்டோர்ஃப், சீன் அபூட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர் எப்போது?
முதல் போட்டி – நவம்பர் 23
2வது போட்டி – நவம்பர் 26
3வது போட்டி – நவம்பர் 28
4வது போட்டி – டிசம்பர் 1
5வது போட்டி – டிசம்பர் 3
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
இந்தியன் 2 : சேனாபதி இஸ் பேக்!
தேவர் ஜெயந்தியில் ‘மலர் வளையத்திற்கு பதிலாக மாலை’: ஆட்சியர் உத்தரவு!