இங்கிலாந்து அணியை சிதறடித்த இங்கிலீஸ்… ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை!

Published On:

| By christopher

aus win england and set record chase

Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரும் இலக்கை அதிரடியாக சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. aus win england and set record chase

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு கவனித்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று லாகூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

இரு அணிகளுக்கு இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டும் என இலக்குடன் விளையாடின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் பில் சால்ட் 2வது ஓவரில் வெறும் 10 ரன்களில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அபார சதம் அடித்து அசத்தினார். அவர் 17 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 143 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவருக்கு உறுதுணையாக ஜோ ரூட் 68 ரன்கள் குவித்தார். ஆனால் ஜோஸ் பட்லர் (23) உட்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக கேப்டன் ஸ்மித், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் மேத்யூ ஷார்ட் (63), லாபுஷேன் (47), ரன்களும், அலெக்ஸ் கேரி (69) ரன்கள் குவித்து பொறுப்புடன் விளையாடினர். அவர்களுடன் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஸ் அதிரடியாக ஆடி 86 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 15 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 356 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 2.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோத தயாராகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share