WTC FINAL : ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன் மற்றும் நேரலை – முழு விவரம்!

Published On:

| By christopher

AUS vs SA playing 11 in wtc final 2025

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை தென்னாப்பிரிக்கா அணி இன்று (ஜூன் 11) எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. AUS vs SA playing 11 in wtc final 2025

50 ஓவர், டி20, டி10 என ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கிரிக்கெட் போட்டிகளின் ஓவர்கள் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவமாக உள்ள டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மோதுகின்றன.

இந்த போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்கும் நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ADVERTISEMENT

பிளேயின் லெவன் விவரம்!

தென்னாப்பிரிக்கா

ஏய்டன் மார்க்ராம், ரியான் ரிக்கில்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரெய்ன்(விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

ஆஸ்திரேலியா

உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷனே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

ADVERTISEMENT

எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை ஜியோஹாட்ஸ்டார் ஆப் மூலம் ஆன்லைனில் நேரலையாக காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share