பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது பழைய நண்பர் என்பதால் சந்தித்தேன்; பாஜக சார்பில் அவரிடம் பேசவில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Auditor Gurumoorthy Clarifies 3-Hour Discussion with Ramadoss
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் அதிதீவிரமடைந்தது. ராமதாஸ் குடும்பத்தினர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளால் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார்.
ராமதாஸ்- அன்புமணி இடையேயான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திடீரென ஒரே காரில் மூத்த அரசியல் தலைவர் சைதை துரைசாமி மற்றும் பாஜகவின் அதிகார மையமாக கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்தனர்.

டாக்டர் ராமதாஸுடனான ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியின் சந்திப்பு சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாவது: ராமதாஸ் என்னுடைய நீண்டகால நண்பர்.என்னை ராமதாஸுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப நாள் கழித்து பேசிக் கொண்டிருந்தோம்.
நான் பாஜகவுக்காக ராமதாஸை சந்தித்து பேச வரவில்லை. அன்புமணி ராமதாஸ் இங்கே வந்தார் என்பதே எங்களுக்கு தெரியாது. பிரச்சனை இருக்கும் இடத்துக்கு நான் போவது இல்லை.. நான் இருக்கும் இடத்தில் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.