மதுரை ரயில்வே கோட்டத்தில் வாடிப்பட்டி- கொடைரோடு ரயில் நிலையங்களிடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல் வழியாக தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Attention Train Passengers
செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848): வரும் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை- செங்கோட்டை (16847) மார்க்கத்தில் இன்று 5-ந் தேதி, 8-ந் தேதி, 11-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும்; புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி- ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12666) வரும் 7-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.
மாதா வைஷ்ணவதேவி- கத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16788) வரும் 5-ந் தேதி, 12-ந் தேதிகளில் காரைக்குடி, மானாமதுரை வழியாக செல்லும்.
கோவை- நாகர்கோவில் ரயில் (16322) 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.
மதுரை- கச்சிக்குடா (07192) வாராந்திர எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து இன்றும் வரும் 11-ந் தேதியும் 1 மணிநேரம் தாமதமாக புறப்படும்.