பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள்

Published On:

| By Mathi

Spl Trains

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ப் கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது:

  • மைசூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06283): டிசம்பர் 23, 27-ல் மைசூருவில் இருந்து மாலை 6:35 மணிக்குக் கிளம்பி, மறுநாள் காலை 11:00 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.
  • தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் (06284): டிசம்பர் 24, 28-ல் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரை சென்றடையும்
  • நாகர்கோவில் – மட்காவ் சிறப்பு ரயில் (06083): டிசம்பர் 23, 30, ஜனவரி 6 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து காலை 11:40 மணிக்குக் கிளம்பி, மறுநாள் காலை 8:50 மணிக்கு மட்காவ் சென்றடையும்
  • மட்காவ் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06084): டிசம்பர் 24, 31, ஜனவரி 7 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் மட்காவ் ஜங்ஷனில் இருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
  • ஹுப்பள்ளி – திருவனந்தபுரம் வடக்கூர் சிறப்பு ரயில் (07361): டிசம்பர் 23 அன்று காலை 6:55 மணிக்கு ஹுப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.
  • திருவனந்தபுரம் – பெங்களூரு சிறப்பு ரயில் (07362): டிசம்பர் 24-ல் பகல் 12:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, பெங்களூருவை அதிகாலை 5:50 மணிக்கு சென்றடையும்.
  • பெங்களூரு – கொல்லம் சிறப்பு ரயில் (06561): டிசம்பர் 27 அன்று மாலை 3:00 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:25 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
  • கொல்லம் – ஹுப்பள்ளி சிறப்பு ரயில் (06562): டிசம்பர் 28 அன்று காலை 10:40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 மணிக்கு ஹுப்பள்ளியை சென்றடையும்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share