ADVERTISEMENT

பயணிகள் கனிவான கவனத்துக்கு… நாளை முதல் 3 நாட்களுக்கு திண்டுக்கல்- செங்கோட்டை ரயில் சேவை ரத்து

Published On:

| By Mathi

Train Services

ஈரோடு- செங்கோட்டை இடையேயான ரயில் சேவையில் ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் ஆகஸ் 30- ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு நாள் தோறும் பிற்பகல் 2 மணிக்கு (6845) புறப்படும் ரயில், ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் ஆகஸ்ட் 30-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

ADVERTISEMENT

சமயநல்லூர்- மதுரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே இந்த ரயில் சேவை மேற்குப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படும்.

செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் (6846) காலை 5.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில், ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 30-ந் தேதி வரை செங்கோட்டை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்; இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share