பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம்!

Published On:

| By Mathi

Train Services

திருச்சியில் இருந்து திண்டுக்கல், மதுரை வழியாக செல்லக் கூடிய சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Changes in Train Services

மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16848): ஜூலை 18-ந் தேதி முதல் ஜூலை 22-ந் தேதி வரை கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இயக்கப்படமாட்டாது. இதற்கு மாற்றாக விருதுநகரில் இருந்து மானாமதுரை- காரைக்குடி வழியாக திருச்சியை சென்றடையும்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (12666): ஜூலை 19-ந் தேதியில் இருந்து இந்த ரயிலும் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை- மானாமதுரை- சிவகங்கை- காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்; திருமங்கலம்- மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128): ஜூலை 17-ந் தேதி முதல் ஜூலை 21-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்சி சென்றடையும்; மதுரை- திண்டுக்கல் பாதையில் செல்லாது.

ADVERTISEMENT

வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (16788) ஜூலை 17-ந் தேதியில் இருந்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்; திண்டுக்கல்- மதுரை வழியாக செல்லாது.

கன்னியாகுமரி- ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229): ஜூலை 18-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அருப்புக்கோட்டை- மானாமதுரை- காரைக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்; மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

ADVERTISEMENT

மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ்(16352): ஜூலை 20-ந் தேதி காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு விருதுநகர்- அருப்புக்கோட்டை- காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்; மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது.

மதுரையில் இருந்து ஜூலை 16-ந் தேதி காலை 10.40 மணிக்கு புறப்படும் கச்சிகுடா சிறப்பு கட்டண ரயில் (07192) பகல் 12 மணிக்கு புறப்படும்.

ஜூலை 18-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சரளப்பள்ளி செல்லும் 07696 சிறப்பு கட்டண ரயில் காலை 9.10 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு புறப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share